சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பேரனும், மு.க.அழகிரியின் மகனுமான துரை தயாநிதி உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சினிமா தயாரிப்பாளரான துரை தயாநிதி சென்னையில் உள்ள அவரது வீட்டில் திடீரென மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் மூளை பக்கவாத பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். தொடர்ந்து அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சிகிச்சையில் இருக்கும் துரை தயாநிதியை காண முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் குடும்பத்தினர் மருத்துவமனை சென்றதாக கூறப்படுகிறது.