வட கொரிய பெண்கள் அதிக எண்ணிக்கையில் குழந்தைகளை பெற வேண்டும்: கண்ணீர் சிந்திய அதிபர் கிம் ஜாங் உன்

வடகொரிய நாட்டை அதிபர் கிம்ஜாங் உன் சர்வாதிகாரி போல் ஆட்சி செய்து வருவதாக புகார்கள் வெளியாகி உள்ளன.வல்லரசான அமெரிக்க நாட்டை எதிர்க்க பல்வேறு நாடுகள் பயந்து வரும் நிலையில் கிம்ஜாங் உன், அந்நாட்டின் அச்சுறுத்தல்களுக்கு எப்போதும் பயப்படுவது இல்லை.

இந்நிலையில் பியாங்யாங் நகரில் நடைபெற்ற பெண்களுக் கான மேம்பாட்டு நிகழ்ச்சியில் அதிபர் கிம் ஜாங் உன் பேசிய தாவது:

நமது நாட்டில் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது. இதனால் பெண்கள் அதிக குழந்தைகளை பெற்று கொள்ள வேண்டும். அதுதான் நம் நாட்டை பாதுகாக்கும். குழந்தைகளை பராமரித்து நன்றாக வளர்க்க வேண்டும். முறையாக கல்வி வழங்க வேண்டும். இதனை செய்ய நான் தயாராக இருக்கிறேன்.

சமீபகாலமாக அதிகரித்து வரும் சோஷலிசமற்ற பழக்க வழக்கங்களை ஒழித்து, குடும்ப நல்லிணக்கம், சமூக ஒற்றுமையை மேம்படுத்த வேண்டும். அதன் மூலம்பண்பாடு, ஒழுக்கம் நிறைந்த வாழ்வுக்கான சிறந்த வழியை உருவாக்க வேண்டும். ஒருவருக்கு ஒருவர் உதவி, முன்னோக்கிச் செல்வதும் அவசியம். எனவே, குழந்தைகளை நன்றாக கவனித்துஅவர்களுக்குத் தேவையான கல்விவசதிகளை ஏற்படுத்தித் தருவதே நமது முக்கியக் கடமையாகும்

இவ்வாறு அவர் பேசினார்.

இப்படி அவர் பேசிக் கொண்டிருக்கும்போதே மேடையில் அவர் கண்ணீர் விட்டு அழுதார். பின்னர், அவர் தனது கையில் இருந்த வெள்ளை நிற கைக்குட்டையை எடுத்து கண்ணீரை துடைத்துத் கொண்டார். இதுதொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.