வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன்

முன்னாள் உலக அழகியான ஐஸ்வர்யா ராய் திரைப்படங்களில் அறிமுகமாகி பாலிவுட்டில் சில பல வெற்றிப் படங்களில் நடித்தார். அவருக்கும் நடிகர் அமிதாப்பச்சன் மகன் அபிஷேக் பச்சனுக்கும் 2007ம் ஆண்டு திருமணம் நடந்தது. அவர்களுக்கு 12 வயதில் ஆராத்யா என்ற மகள் இருக்கிறார்.

இந்நிலையில் சில வாரங்களாக அபிஷேக், ஐஸ்வர்யா இருவரும் பிரிந்துவிட்டதாக சிலர் வதந்திகளைக் கிளப்பிவிட்டனர். ஒரு நிகழ்வில் கலந்து கொண்ட அபிஷேக் கையில் அவரது திருமண மோதிரம் இல்லை என்பதை ஒரு காரணமாக வைத்து இப்படி பரப்பியிருந்தனர். அவற்றிற்கு பதிலடி கொடுக்கும் விதமாக குடும்பத்துடன் ஒரு நிகழ்வில் கலந்து கொண்டு வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்தனர்.

அபிஷேக்கின் அக்கா ஸ்வேதா பச்சனின் மகன் அகஸ்திய நந்தா அறிமுகமாகும் 'த ஆர்ச்சிஸ்' படத்தின் பிரிமியர் ஷோவில்தான் அவர்கள் ஒன்றாக கலந்து கொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.