புவனேஸ்வர்,ஒடிசாவில் உள்ள மதுபான நிறுவனம் மீது வரி ஏய்ப்பு புகார் வந்தது. இதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் வருமான வரித்துறை அதிகாரிகள் மாநிலத்தின் பல்வேறு பகுதியில் உள்ள அந்த நிறுவனத்துக்கு சொந்தமான அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தினர்.
புவனேஸ்வர், போலங்கீர், சம்பல்புர், மற்றும் ராஞ்சி, கோல்கட்டா போன்ற இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது. இதில் கணக்கில் வராத பெருமளவிலான பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
பணத்தை எண்ணுவதற்காக அதிகாரிகள் ஏராளமான இயந்திரங்களை பயன்படுத்தினர். இதன் வாயிலாக, 150 கோடி ரூபாய் வரை பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement