சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியல்கள் வரிசையில் விரைவில் கிழக்குவாசல் சீரியலும் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வாரம் வெளியாகியுள்ள டிஆர்பியிலும் இந்தத் தொடர் புள்ளிகளில் முன்னேற்றம் காட்டியுள்ளது. இந்தத் தொடரில் நடிகர் விஜய்யின் தந்தையும் பிரபல இயக்குநருமான எஸ்ஏசி முன்னணி கேரக்டரி நடித்து வருவது இந்தத் தொடரின் சிறப்பாக அமைந்துள்ளது.
