சபரிமலை:6000 கோடி ரூபாய் செலவில் அமையும் செங்கனூர் — பம்பை ரயில் பாதையின் திட்ட அறிக்கை இந்த வாரம் இறுதி செய்யப்படுகிறது.
சபரிமலைக்கு ரயில் என்பது பக்தர்களின் நீண்ட கால கனவாக உள்ளது. சபரிமலைக்கு மிக அருகில் உள்ள செங்கனூர் ரயில் நிலையத்தில் இறங்கி பக்தர்கள் இரண்டரை மணி நேரம் பஸ்ஸில் பயணம் செய்து பம்பை வரவேண்டும். இதை தவிர்க்க பம்பை வரை ரயில் இயக்க தொடர்ந்து கோரிக்கை வைக்கப்படுகிறது.
சபரிமலை காடுகள் பெரியாறு புலிகள் சரணாலய வனப்பகுதியில் இருப்பதால் பல்வேறு நிர்வாக சிக்கல்கள் இருந்தது. எனினும் அவற்றையெல்லாம் சரி செய்து இந்தத் திட்டத்திற்கு இறுதி வடிவம் கிடைத்துள்ளது.
பூனேயை தலைமையிடமாகக் கொண்ட தனியார் நிறுவனம் இந்தத் திட்ட அறிக்கையை தயாரித்துள்ளது. இந்தவாரம் இறுதி செய்யப்படுகிறது. முதலில் உயரமான தூண்களில் இந்தப் பாதையை கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டு இருந்தாலும் தற்போது தூண்கள், சுரங்க பாதைகள் அமைத்து பாதை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
பம்பை நதிக்கரை வழியாக ரயில் பாதை அமைக்க ஆலோசிக்கப் பட்டாலும் அதில் ஏராளமான வளைவுகள் இருப்பதன் காரணமாக ரயில் வேகமாக செல்ல முடியாத நிலை ஏற்படும் என்பதால் அது தவிர்க்கப்பட்டது. 60 கிலோமீட்டர் தூரமுள்ள இந்தப்பாதையின் மொத்த செலவு 6000 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்காக 177.80 எக்டேர் வனநிலம் கையக்கப்படுத்தப்பட வேண்டும்.
சபரிமலைக்கு ரயில் பாதை அமைக்கப்படும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உறுதியளித்திருந்த நிலையில் சர்வே பணி தீவிர படுத்தப்பட்டது.
அங்கமாலி– – எருமேலி ரயில் பாதையும் துறையின் தீவிர பரிசீலனையில் உள்ளது. கடந்த மத்திய பட்ஜெட்டில் அங்கமாலி — எருமேலி பாதைக்கு 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement