திரையுலகம் நடத்தும் கலைஞர் நூற்றாண்டு விழா – ஜனவரிக்கு தள்ளிப்போனதன் பின்னணி!

தமிழ்த் திரையுலகம் சார்பில் இம்மாதம் 24ம் தேதி நடக்கவிருந்த கலைஞர் நூற்றாண்டு விழா, அடுத்த ஆண்டான ஜனவரி மாதத்திற்குத் தள்ளிப்போகிறது. கலைஞர் நூற்றாண்டு விழாவைத் தமிழ்த் திரையுலகம் சார்பிலும் கொண்டாட இருக்கின்றனர்.

இதற்கான பிரமாண்ட விழா டிசம்பர் 24ம் தேதி சென்னையில் கொண்டாடுவதாக இருந்தது. தமிழ்த் திரையுலகின் அனைத்து சங்கங்களும் இணைந்து நடத்தும் இவ்விழாவின் ஏற்பாடுகளை தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் மும்முரமாக செய்து வருகின்றனர். இந்நிலையில் இவ்விழா, ஜனவரிக்கு தள்ளிப்போயிருக்கிறது.

கமல், ரஜினி

இந்தாண்டு கலைஞர் கருணாநிதியின் 100-வது பிறந்த நாள் என்பதால் ஆண்டு முழுவதும் நூற்றாண்டு விழாவாகக் கொண்டாடச் சிறப்பு ஏற்பாடுகளை தி.மு.க-வினர் செய்தனர். தமிழக அரசு சார்பிலும் நூற்றாண்டு விழாவைப் பிரமாண்டமாகக் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் நிறைவேற்றிய தீர்மானத்தின் படி, தமிழ்த் திரையுலகம் சார்பில், பெப்சி, நடிகர் சங்கம் உள்பட அனைத்து சங்கங்களுடன் ஒன்றிணைந்து கலைஞர் நூற்றாண்டு விழாவைக் கோலாகலமாகக் கொண்டாட முடிவு செய்தனர். ரஜினி, கமல், விஜய், அஜித் என அனைத்து நடிகர்களுக்கும் அழைப்பிதழ் கொடுத்து, விழாவில் பங்கேற்க வேண்டுகோள் விடுத்தனர். கமலும், ரஜினியுடம் விழாவிற்கு கண்டிப்பாக வருவதாக தெரிவித்தனர். விழா தினத்தன்று உள்ளூர், வெளியூர் என அனைத்து படப்பிடிப்புகளையும் ரத்து செய்திருந்தனர். சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்த விழா நடைபெறவுள்ளது. வருகிற 24ம் தேதி விழா நடைபெறுவதாக இருந்த விழாவை இப்போது ஜனவரி 6ம் தேதிக்கு மாற்றியுள்ளனர். இதுபற்றி தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் தெரிவித்துள்ளதாவது..

உதயநிதி ஸ்டாலின்

”சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளீட்ட பல்வேறு மாவட்டங்களில் மிக்ஜாம் புயலால் மக்கள் சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளனர். முதல்வர் அவர்களும் அரசு நிர்வாகமும் மக்களுக்கான நிவாரண பணிகளில் முழு மூச்சாக ஈடுபட்டுள்ளார்கள். அதனை கருத்தில் கொண்டு 24ம் தேதிக்கு நடக்கவிருந்த விழாவை 6.1.24 சனிக்கிழமை அன்று மாற்றியுள்ளோம்.” என தெரிவித்துள்ளனர்.

இன்னொரு விஷயமும் சொல்கிறார்கள். வருகிற 17ம் தேதி சேலத்தில் நடைபெறுவதாக இருந்த திமுக இளைஞரணி மாநாட்டை வருகிற 24ம் தேதிக்கு மாற்றியுள்ளனர். இதுகுறித்து திமுக சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் “மிக்ஜாம்” புயலால் பெய்த பெருமழை வெள்ளம் காரணமாக, சில மாவட்டங்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி, மழை, வெள்ள நிவாரணப் பணிகள் நடைபெற்று வருவதால், வருகிற 17-12-2023 அன்று சேலத்தில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட திமுக இளைஞர் அணி இரண்டாவது மாநில மாநாடு தேதி மாற்றப்பட்டு, வருகிற 24-12-2023 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெறும், என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.”

இளைஞரணி மாநாடு 24ம் தேதி நடைபெறுவதால் தான், திரையுல்க விழா ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்கிற குரலும் ஒலிக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.