கம்பம்:ஒரே வழித்தடத்தில் மாதத்தில் 20 முறை பயணம் செய்தால் அடுத்து 2 முறை இலவசமாக பயணம் செய்து கொள்ளலாம் என கேரள அரசு போக்குவரத்து கழகம் சலுகை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள கேரள அரசு போக்குவரத்து கழகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கூரியர் தபால் சேவை, வேளாண் விளைபொருள்களை கொண்டு செல்ல பார்சல் சேவை, சுற்றுலா பேக்கேஜ்களையும் அறிவித்துள்ளது.
மிஷின்மூலம் டிக்கெட் வழங்க ஒரு ஆண்டிற்கு தேவைப்படும் பேப்பர் ரோல் ரூ.3 கோடிக்கு வாங்குவதை தவிர்க்க ஆன்லைன் டிக்கெட் திட்டத்தையும் அறிவித்துள்ளது. தற்போது ஒருவர் ஒரே வழித்தடத்தில் ஒரு மாதத்தில் 20 முறை பயணம் செய்தால் அடுத்து 2 முறை இலவசமாக பயணம் செய்து கொள்ளலாம் என்று அறிவிப்பும் வெளியிட்டுள்ளது.
போக்குவரத்துக் கழக அதிகாரி கூறுகையில், ‘ திருவனந்தபுரம் மாவட்டத்தில் ஜனவரியிலும், பிற மாவட்டங்களில் பிப்ரவரி மாதத்திலிருந்தும் இந்த சலுகை பயண திட்டம் அறிமுகம் செய்யப்படுகிறது’ என்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement