வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: லோக்சபாவில் அத்துமீறல் விவகாரம் தொடர்பாக உயர்மட்ட குழு விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் லோக்சபாவிற்குள் அத்துமீறிய இளைஞர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து பாராளுமன்ற பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாக எதிர்கட்சிகள் புகார் தெரிவித்தனர்.
இந்நிலையில் பார்லி. அத்துமீறல் சம்பவம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சக செயலருக்கு லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லா கடிதம் எழுதினார். இதனை ஏற்று சி.ஆர்.பி.எப். தலைவர் அனிஷ் தயாள் சிங் தலைமையில் உயர்மட்ட குழு விசாரணை நடத்த உத்தரவிடப் பட்டு உள்ளது. இக்குழுவில் பல்வேறு பாதுகாப்பு குழுவைச் சேர்ந்த உறுப்பினர்கள் இடம் பெற்றுள்ளனர். இக்குழு பாதுகாப்பு குறைபாடுகளை கடண்டறிந்து தேவையான பரிந்துரைகளை வழங்குவர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement