வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வாஷிங்டன்: ‛‛தனது அரசியல் நிலைப்பாட்டை, இஸ்ரேல் மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும். இதே நிலை நீடித்தால் அந்நாடு, மிகப்பெரிய கடினமான நிலையை சந்திக்கும்” அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூவுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், ஜோ பைடன் கூறியிருப்பதாவது: பாலஸ்தீனம் மீதான தாக்குதலால் இஸ்ரேலுக்கு உலக அரங்கில் கிடைத்து வரும் ஆதரவு குறைய துவங்கியுள்ளது. ஹமாஸ் படையினர் மீதான தாக்குதல் மட்டுமில்லாமல் பாலஸ்தீன மக்கள் கொல்லப்படுவது சர்வதேச அளவில் எச்சரிக்கை மணியாக ஒலித்து வருகிறது.
அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக்கப் சல்லிவன், இஸ்ரேல் சென்று பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement