வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: டேஸ்ட் அட்லஸ் இணையதளம் நடத்திய சுவை மிகுந்த உணவுகள் கொண்ட நாடுகள் பட்டியலில் இந்தியா 11வது இடத்தில் உள்ளது. உணவு பொருட்களில் இந்தியாவின் 4 உணவுகள் இடம்பிடித்துள்ளன.
டேஸ்ட் அட்லஸ் என்ற இணையதளம் உலகம் முழுவதும் உள்ள சிறந்த டிஷ் (உணவு வகைகள்), சிறந்த உணவு நகரங்கள், சிறந்த உணவு பொருட்கள், உணவுக்கு தேவையான சிறந்த பொருட்கள் போன்ற பல பிரிவுகளில் ஆய்வு செய்து பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் மொத்தம் 3,95,205 உணவுகளில் 2,71,819 உணவுகள் தேர்ந்தெடுக்கப்பட்டன. அதேபோல், 1,15,660 உணவு பொருட்களில் 80,863 தேர்வு செய்யப்பட்டன.

அதில் சுவைமிக்க உணவுகளை கொண்ட 100 நாடுகளில் இந்தியாவுக்கு 11ம் இடம் அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல், உலகின் சிறந்த 100 டிஷ்களுக்கான பட்டியலில் இந்தியாவின் 4 உணவுகள் இடம்பெற்றுள்ளன. ‛ பட்டர் கார்லிக் நான்’ 7ம் இடமும், ‛முர்க் மக்கானி’ 43வது இடமும், ‛டிக்கா’ 47வது இடமும், தந்தூரி 48 இடமும் பிடித்துள்ளன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement