புதுடில்லி ;அமெரிக்க குடியுரிமை பெற்றுள்ள இந்தியாவை பூர்வீகமாக உடைய, காலிஸ்தான் பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுானை கொலை செய்ய முயற்சி நடந்ததாக
அமெரிக்கா சமீபத்தில் குற்றஞ்சாட்டியது.இது தொடர்பான வழக்கு அமெரிக்க நீதிமன்றத்தில் தாக்கல்
செய்யப்பட்டுள்ளது. அதில், இந்திய அரசு அதிகாரி ஒருவருக்காக, பன்னுானை கொலை செய்ய இந்தியரான நிகில் குப்தா முயற்சி செய்ததாக கூறப்பட்டு உள்ளது. அந்த அதிகாரியின் பெயர் வெளியிடப்
படவில்லை.இந்நிலையில், ஐரோப்பிய நாடான செக் குடியரசில் இருக்கும் நிகில் குப்தாவை, அந்த நாட்டு போலீஸ், கடந்த ஜூன் மாதம் கைது செய்து
உள்ளது. அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்று இந்தக் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, நிகில் குப்தாவை நாடு கடத்தும்படி, அமெரிக்கா கோரியுள்ளது. அது தற்போது அரசின் பரிசீலனையில் உள்ளதாக செக் குடியரசு உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement