ஏலூரு: பிடிஎஃப் (ஆசிரியர் பிரிவு) மேலவை உறுப்பினர் (எம்எல்சி) ஷேக் சாஹிப் ஜி. ஆந்திர அரசுக்கு எதிராக பீமாவரத்தில் நடந்த அங்கன்வாடி ஊழியர்களின் ஆர்ப்பாட்டத்திற்கு, ஆதரவு தெரிவிக்க, ஏலூரில் இருந்து பீமாவரத்திற்கு காரில் நேற்று, சென்று கொண்டிருந்தார்.
அப்போது, செருகுவாடா எனும் இடத்தில், இவரது கார் மீது எதிரே வந்த கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஷேக் சாஹிப் ஜி உயிரிழந்தார். இவரது மெய் காப்பாளர், உதவியாளர், கார் ஓட்டுனர் ஆகியோர் படுகாயமடைந்தனர்.
ஷேக் சாஹிப் மறைவுக்கு முதல்வர் ஜெகன் உட்பட கட்சி பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்தனர்.