சென்னை தமிழக பள்ளிக்கல்வித்துறை ஆசிரியர்களுக்கு 5 ஆண்டுகள் பணி மாற்றம் இல்லை என அறிவித்துள்ளது. இன்று பள்ளிக்கல்வித்துறை செயலாளர் குமரகுருபரன், பள்ளிக்கல்வித்துறை இயக்குநருக்கு ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார். அந்த அறிக்கையில், “தருமபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் அதிக அளவில் உள்ளன. எனவே புதிய ஆசிரியர்களை நியமனம் செய்யும்போது இந்த மாவட்டங்களில் நியமனம் செய்யப்பட வேண்டும். புதிய நியமனம் பெறக்கூடிய ஆசிரியர்களுக்கு 5 ஆண்டுகள் பணியிட மாறுதல் வழங்கக்கூடாது. எந்த இடத்தில் […]
