வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சிங்கப்பூர்: கொரோனா பாதிப்பு திடீரென அதிகரித்து வருவதால், முன்னெச்சரிக்கையாக பொது இடங்களில் முக கவசம் அணியும்படி, மக்களுக்கு சிங்கப்பூர் அரசு அறிவுறுத்தியுள்ளது.
ஆசிய நாடான சிங்கப்பூரில், ‘புளூ’ எனப்படும் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அங்கு கொரோனா பாதிப்பும் கடந்த சில வாரங்களில் திடீரென அதிகரித்து வருகிறது.
கொரோனா பாதிப்பால் ஒரு நாளில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை, 225ல் இருந்து 350ஆக உயர்ந்துள்ளது.
தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை, நான்கில் இருந்து ஒன்பதாக உயர்ந்துள்ளது. கடந்த, 3ம் தேதி முடிந்த வாரத்தில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை, 32,035ஆக இருந்த நிலையில், 9ம் தேதியுடன் முடிந்த வாரத்தில் இது, 56,043ஆக உயர்ந்துள்ளது.
இதையடுத்து, பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிக்கும்படி, மக்களுக்கு சிங்கப்பூர் அரசு அறிவுறுத்தியுள்ளது.
பொது இடங்களில், முக கவசம் அணிவது போன்ற நடைமுறைகளை கட்டாயம் பின்பற்றுமாறு சிங்கப்பூர் சுகாதாரத் துறை கூறியுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement