இங்கிலாந்தில் காணாமல் போன இந்திய மாணவர்; மத்திய மந்திரி உதவ வேண்டுகோள்

லண்டன்,

இங்கிலாந்தில் லாவ்பாரோ பல்கலை கழகத்தில் படித்து வரும் இந்திய மாணவர் ஜி.எஸ். பாட்டியா. கிழக்கு லண்டனில் இருந்த அவர் கடந்த 15-ந்தேதியில் இருந்து காணவில்லை என கூறப்படுகிறது.

இதுபற்றி பா.ஜ.க. மூத்த தலைவரான மன்ஜீந்தர் சிங் சிர்சா என்பவர் எக்ஸ் சமூக வலைத்தளம் வழியே மத்திய வெளிவிவகார துறை மந்திரி ஜெய்சங்கரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார். உங்களுடைய உதவி முக்கியம் வாய்ந்தது என சிர்சா கேட்டு கொண்டார்.

பாட்டியாவின் கல்லூரி அடையாள அட்டை மற்றும் பிற சான்றுகளையும் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இருக்கிறார். இந்த செய்தியை மக்கள் பகிர வேண்டும் என கேட்டு கொண்டதுடன், இந்திய மாணவரை பற்றி ஏதேனும் தகவல் இருக்குமென்றால் தொடர்பு கொள்ளும்படி 2 எண்களையும் பகிர்ந்துள்ளார்.

கடைசியாக கடந்த 15-ந்தேதி கிழக்கு லண்டனின் கேனரி வார்ப் பகுதியில் அவர் தென்பட்டார். அதன்பின்னர் அவரை காணவில்லை. இதனால், அவரை கண்டறியும் முயற்சியில் இந்திய தூதரகம் மற்றும் பல்கலைக்கழகம் ஈடுபட வேண்டும் என்று அவர் கேட்டு கொண்டார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.