வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
தானே:மஹாராஷ்டிராவின் தானே மாவட்டத்தின் கல்யாண் பகுதியில், ‘கல்யாண் ஜனதா சஹாகாரி வங்கி’ செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியின் பொன்விழா ஆண்டு நிறைவு நிகழ்ச்சி நேற்று நடந்தது.
இதில், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் பேசியதாவது:
நலிந்த பிரிவினரின் நிதிச் செழுமையே வங்கிகளின் அடித்தளம். அனைத்து பொருளாதார பிரச்னைகளை பராமரிக்கும் வங்கிகள், சமூக வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
நலிவடைந்த பிரிவினரின் தேவைகளை கண்டறிந்து, அவர்களுக்கு அதிகாரம் அளிப்பது வங்கிகளின் பொறுப்பாகும்.
இந்த பொன்விழா ஆண்டில், புதிய பொறுப்பு களுடன் களமிறங்கும் கல்யாண் ஜனதா சஹாகாரி வங்கி மேலும் ஆற்றல் மிக்கதாக மாறி, சமூக பொறுப்புடன் தன் கடமைகளை நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement