வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
லக்னோ: இரண்டாவது ஆண்டாக இன்று (17 ம் தேதி ) இசை நிகழ்ச்சியுடன் துவங்கிய காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பிரதமர் கலந்து கொண்டார். இன்று துவங்கி உள்ள நிகழ்ச்சி வரும் 30ம் தேதி வரை நடைபெற உள்ளன.
![]() |
உத்தர பிரதேசத்தின் வாரணாசிக்கும், தமிழகத்துக்கும் இடையே உள்ள வரலாற்று, கலாசார இணைப்புகளை வெளிப்படுத்தும், இரண்டாவது காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிகள் இன்று துவங்கின. வாரணாசியில் துவங்கிய நிகழ்ச்சியை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார்.
உத்தர பிரதேசத்தின் காசி, பனாரஸ் என்றழைக்கப்படும் வாரணாசிக்கும், தமிழகத்துக்கும் இடையே நீண்ட வரலாற்று, கலாசார பிணைப்பு உள்ளது. இதை வெளிப்படுத்தும் வகையில், காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி கடந்தாண்டு நடத்தப்பட்டது.இதற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து, நாடு முழுதும் பல்வேறு நகரங்களுக்கு இடையேயான பிணைப்புகளை வெளிப்படுத்தும் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டன.
![]() |
இசை நிகழ்ச்சியுடன் துவங்கிய விழாவில் பிரதமர் மோடி உ.பி., மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் மத்திய அமைச்சர் தர்மேந்திரபிரதான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement