தென் மாவட்டங்களில் அதி கனமழை எச்சரிக்கை; கண்காணிப்பு பணிக்கு 4 மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம்!
திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் மழை மற்றும் வெள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காகவும், பொதுமக்களைப் பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு செல்லவும், மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தவும், அனைத்துத் துறைகளின் செயல்பாடுகளை ஒருங்கிணைப்பதற்காகவும் செல்வராஜ், நாகராஜன், ஜோதி நிர்மலா மற்றும் சுன்சோங்கம் ஜதக் சிரு ஆகிய 4. மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தொடர் கனமழை… மிதக்கும் தென் மாவட்டங்கள்!
கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் தொடர் கனமழை காரணமாக, பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிப்பு. நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்ககில், 9 இடங்களில் 20 செ.மீ-க்கு மேல் மழை பதிவாகியிருக்கிறது.




பாளையங்கோட்டை பகுதியில் 26 செ.மீ மழை பதிவாகியிருக்கிறது. நாளையும் (18-ம் தேதி) கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு உட்பட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி நகரில் அதிகாலை முதல் தொடரும் கனமழையால் குலவணிகர்புரத்தில் சாலைகள், வீடுகளில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்.!
கனமழை காரணமாக குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாத்தான்குளத்தில் காலை முதல் கனமழை பெய்து வருகிறது.
மிக்ஜாம் புயல் நிவாரணத் தொகை ரூ.6,000 – தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்!
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்ட மக்கள் மிகக் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்தனர். குறிப்பாக சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் வெள்ள பாதிப்பால், தங்கள் உடமைகளை இழந்து, பரிதவிப்பு நிலைக்குத் தள்ளப்பட்டனர். தற்போது வெள்ள பாதிப்பிலிருந்து மக்கள் மெல்ல மீண்டெழுந்திருக்கும் நிலையில், தமிழக அரசு புயல் நிவாரணமாக ரூ.6,000 அறிவித்தது.

எந்தெந்த பகுதிகளில், யார் யாருக்கு நிவாரணத் தொகை கிடைக்கும் என்பதைத் தெளிவுபடுத்திய அரசு, அதற்கான டோக்கன்களையும் விநியோகிக்கத் தொடங்கியிருக்கிறது. இந்த நிலையில், டோக்கன் கிடைக்கப்பெற்றவர்களுக்கு நிவாரணத் தொகையான 6,000 ரூபாயை முதல்வர் ஸ்டாலின் இன்று வழங்கி, நிகழ்வைத் தொடங்கி வைத்தார்.







சென்னை வேளச்சேரி, சக்தி விஜயலட்சுமி நகரிலுள்ள நியாய விலைக்கடையில், மிக்ஜாம் புயல், கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6,000 நிவாரணத் தொகை வழங்கி, நிகழ்வை ம்முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.