புத்தாண்டுக்கு புதிய போன் வாங்க வேண்டுமா? ஜனவரியில் அறிமுகமாகும் ஸ்மார்ட்போன்கள்

இன்னும் சில நாட்களில் டிசம்பர் முடிந்து 2024 வரப்போகிறது. பல பேர் புத்தாண்டில், புதிய ஸ்மார்ட்போன்களை வாங்கலாம் என காத்திருக்கின்றனர். 5 ஸ்மார்ட்போன்கள் ஜனவரியில் அறிமுகம் செய்யப்பட உள்ளன. OnePlus, Xiaomi, Samsung மற்றும் Vivo ஸ்மார்ட்போன்கள் மிகப்பெரிய தள்ளுபடியுடன் புத்தாண்டில் ரிலீஸாக இருக்கின்றன. இந்த ஃபோன்களில் 100W வேகமான சார்ஜிங் ஆதரவு மற்றும் சிறந்த கேமரா அமைப்பு இருக்கின்றன. ஒவ்வொரு மொபைலுக்கும் என்ன ஸ்பெஷல் என்பதை பார்க்கலாம்.

ஒன்பிளஸ் 12

ஒன்பிளஸ் 12 இந்தியாவில் ஜனவரி 23 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படும். இந்த போன் ஏற்கனவே சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எனவே அதன் அம்சங்கள் ஏற்கனவே வெளியாகியுள்ளன. போனில் 6.8 இன்ச் AMOLED டிஸ்ப்ளே இருக்கும். இந்த ஃபோன் Snapdragon 8 Gen 3 சிப்செட் மூலம் இயக்கப்படும். இது தவிர, ஃபோன் 100W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவுடன் வரும். போனில் 5400mAh பேட்டரி இருக்கும். போனில் 50எம்பி கேமரா இருக்கும்.

Xiaomi Redmi Note 13

Xiaomi Redmi Note 13 தொடர் ஜனவரி 4 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படும். இந்த சீரிஸில் மூன்று மாடல்கள் இருக்கும் (Redmi Note 13, Redmi Note 13 Pro மற்றும் Redmi Note 13 Pro Plus). MediaTek Dimensity 7200 செயலி ஆதரவு போனில் கிடைக்கும். போனில் 5000mAh பேட்டரி இருக்கும்.

Vivo X100 Pro மற்றும் X100

Vivo ஒரு புதிய டீசரை அறிமுகப்படுத்தியுள்ளது. அதில் Vivo X100 தொடரின் வெளியீடு குறித்து நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. இதன் பொருள், விவோ தனது புதிய ஸ்மார்ட்போன் சீரிஸை விரைவில் அறிமுகப்படுத்துவது உறுதியாகியுள்ளது. அதிகபட்சமாக இது ஜனவரியில் ரிலீஸாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போன் MediaTek Dimensity 9300 சிப்செட் மூலம் இயக்கப்படும். இதில் 1 இன்ச் பயோனிக் சென்சார் வழங்கப்படும்.

ஒன்பிளஸ் 12ஆர்

OnePlus 12 உடன் OnePlus 12R -ஐயும் அறிமுகப்படுத்துகிறது. அதாவது ஜனவரி 23 ஆம் தேதி தொலைபேசி வழங்கப்படும். போனின் அம்சங்கள் மற்றும் விவரக்குறிப்புகள் பற்றி இதுவரை எதுவும் தகவல் வெளியாகவில்லை.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.