சென்னை சென்னை மயிலாப்பூரில் திமுக துணைப் பொதுச் செயலர் கனிமொழி 1000 குடும்பங்களுக்கு வெள்ள நிவாரணப் பொருட்கள் வழங்கி உள்ளார். சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்கள் மிக்ஜம் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்த பகுதிகளில் புயல் மற்றும் மழையால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இந்த பகுதிகளில் தேங்கிய வெள்ள நீர் அரசால் அகற்றப்பட்டு தற்போது இயல்பு நிலை திரும்புகிறது. திமுக சார்பில் ‘மிக்ஜம்’ புயல் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படுகின்றன. […]
