IPL Auction 2024: 17ஆவது ஐபிஎல் சீசனை முன்னிட்டு நடத்தப்படும் மினி ஏலம் துபாய் கோகோ கோலா அரங்கத்தில் இன்று நடைபெற உள்ளது. இந்தியாவுக்கு வெளியே முதல்முறையாக ஏலம் நடைபெறுகிறது. தொடர்ந்து 333 வீரர்கள் ஏலம் விடப்பட உள்ள நிலையில் 77 வீரர்களின் இடங்கள் மட்டுமே நிரப்பப்பட உள்ளன.
ஏலத்தின் முக்கிய வீரர்கள் யார் யார்?
ஐபிஎல் ஏலம் மீது பெரிதும் எதிர்பார்ப்பு எழுந்ததற்கு முக்கிய காரணம் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியாவை, குஜராத் டைட்டன்ஸிடம் இருந்து மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியதும், அதன்பின் ஹர்திக் பாண்டியா மும்பை அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டதும்தான் எனலாம்.
மேலும், இந்த ஏலத்தில் பல முன்னணி வீரர்கள் இடம்பெற்றுள்ளதாலும் ஏலம் குறித்து எதிர்பார்ப்புகள் உள்ளன. அதில் முக்கிய வீரர்கள் என்றால் டேரில் மிட்செல், ரச்சின் ரவீந்திரா, ஜெரால்டு கோட்ஸி, பாட் கம்மின்ஸ், ஹேசில்வுட், மிட்செல் ஸ்டார்க், டிராவிஸ் ஹெட் ஆகியோரை சொல்லலாம். இவர்கள்தான் இந்த ஏலத்தின் முக்கிய வீரர்களாக இருப்பார்கள்.