
விஜய் 68 வது படத்தின் டைட்டில் பாஸ்?
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 68 வது படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விஜய் உடன் பிரபுதேவா, பிரசாந்த், மோகன், மீனாட்சி சவுத்ரி, சினேகா, லைலா, பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்த படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடித்து வருகிறார். அதில் ஒரு வேடத்தில் 25 வயது கெட்டப்பில் விஜய்யை இளமையாக காட்ட வேண்டும் என்பதற்காக புதிய டெக்னாலஜியை பயன்படுத்தி உள்ளார் வெங்கட் பிரபு.
விஜய் 68 வது படத்திற்கு மூன்று டைட்டில்களை ரெடி பண்ணி உள்ளாராம் வெங்கட் பிரபு. அதில் ஒரு தலைப்பின் பெயர், பாஸ் என்று கூறப்படுகிறது. கதைக்கு பாஸ் என்ற இந்த டைட்டில் பொருத்தமாக இருக்கும் என்பதால் இதை தான் புத்தாண்டு தினத்தில் அறிவிப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.