குருகிராம்:ஹரியானாவின் நூஹ் மாவட்டம் ஹத்தங்கன் கிராமத்தில் சட்டவிரோதமாக மணல் அள்ளுவதாக புகார் வந்தது. அதுகுறித்து விசாரிக்க, போலீஸ்காரர்கள் லக்மி சந்த் மற்றும் மகேஷ் ஆகிய இருவரும் சென்றனர்.
ஆரவல்லி மலைப்பகுதியில் உள்ள ஒரு இடத்தில் சிலர் சட்டவிரோதமாக இயந்திரம் பயன்படுத்தி மணல் அள்ளிக்கொண்டு இருந்தனர். போலீசார் இருவரும் அதை தடுக்க முயன்றனர். ஆனால், மணல் கடத்தல்காரர்கள் இரு போலீஸ்காரர்கள் மீதும் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர்.
அப்போது, அந்தப் பகுதிக்கு மேலும் சில போலீசார் வந்ததால், தாக்குதல் நடத்திய கும்பல் தப்பிச் சென்றது.
லாரி மற்றும் இயந்திரங்களை கைப்பற்றிய போலீசார், நசிம், ஜாம்ஷெட், யாசின், சாஹித், விஜித், நஸ்ரு, கண்ணு ஆகியோர் உட்பட 18 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மணல் கடத்தல்காரர்களைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement