3rd ODI: South Africa set a target of 297 runs | 3-வது ஒரு நாள் கிரிக்கெட்: தென்ஆப்ரிக்காவுக்கு 297 ரன்கள் இலக்கு

பார்ல்: இந்தியா, தென் ஆப்ரிக்க அணிகள் மோதும் மூன்றாவது ஒருநாள் போட்டியில், தென்ஆப்ரிக்காவுக்கு 297 ரன்கள் இலக்காக இந்தியா நிர்ணயித்துள்ளது.

தென் ஆப்ரிக்கா சென்று உள்ள இந்திய அணி மூன்று போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இந்தியா வென்றது. இரண்டாவது போட்டியில் தென் ஆப்ரிக்கா வெற்றி பெற, தொடர் 1-1 என சமனில் உள்ளது.

இரு அணிகள் மோதும் மூன்றாவது, கடைசி போட்டி இன்று பார்ல் நகரில் உள்ள போலந்து பார்க் மைதானத்தில் நடக்கிறது. முதலில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா பவுலிங்கை தேர்வு செய்தது. தொடர்ந்து பேட்டிங் செய்ய களம் இறங்கிய இந்தியா 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 296 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 108 ரன்கள் எடுத்தார். திலக் வர்மா 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதையடுத்து தென் ஆப்ரிக்காவுக்கு 297ரன்கள் இல்லாக நிர்ணயித்துள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.