ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில், ராணுவ வீரர்கள் சென்ற வாகனங்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 3 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ரஜோரி, பூஞ்ச் மாவட்ட எல்லைப்பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து தேடுதல் வேட்டை நடத்துவதற்காக ராணுவ வீரர்கள் இரு வாகனங்களில் சென்று கொண்டிருந்தனர். இந்த வாகனங்கள் சவுரான் கோட் என்ற பகுதி வழியாக ராஜோரி மாவட்டம் பூபியாஸ் என்ற பகுதிக்கு சென்ற போது மறைந்திருந்த பயங்கரவாதிகள் ராணுவ வாகனங்கள் மீது திடீர் தாக்குதல் நடத்தினர்.
உஷாரான ராணுவ வீரர்கள் எதிர் தாக்குதல் நடத்தினர். இதில் படுகாயமடைந்த 3 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். தொடர்ந்து அங்கு இரு தரப்பிலும் துப்பாக்கி சண்டை நடைபெற்று வருவதாகவும், பயங்கரவாதிகள் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement