சென்னை: டெல்லி செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த மாநில பாஜக தலைவர் அண்ணாமலை, பொன்முடியைப் போல மேலும் 11 அமைச்சர்கள் உள்ளதாகவும், அவர்களது வழக்குகளிலும் விரைவில் தீர்ப்புகள் வரும் என்று நம்புவதாக தெரிவித்தார். பொன்முடி, துரை முருகன், கேன்.என்.நேரு, ஐ.பெரியசாமி, எம். ஆர்.கே. பன்னீர் செல்வம், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன், தங்கம் தென்னரசு, ரகுபதி, கே.ஆர்.பெரிய கருப்பன், அன்பரசன், அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகிய திமுக அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகளில் விரைவில் தீர்ப்பு வரும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்தார். […]
