Electric Scooter and bikes launches – 2023ல் விற்பனைக்கு வந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மற்றும் பைக்குகள்

இந்தியாவில் 2023 ஆம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மற்றும் பைக்குகள் பற்றிய சிறப்பு தொகுப்பில் அறிந்து கொள்ளலாம். தொடர்ந்து சந்தையில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு வரவேற்பு அதிகரித்து வருகின்றது.

2023 ஆம் ஆண்டில் ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் S1X, S1X+, ஏதெர் 450S, டிவிஎஸ் X, சிம்பிள் டாட் ஒன் மற்றும் சிம்பிள் ஒன், ஆர்கஸா மாண்டிஸ், கைனெடிக் ஜூலு, மேட்டர் ஏரா, ஒபென் ரோர் உள்ளிட்ட மாடல்கள் வந்துள்ளன. குறிப்பாக ஒரு சில மாடல்கள் சில ஆண்டுகளுக்கு முன் அறிமுகம் செய்யப்படாலும் விற்பனைக்கு 2023ல் வெளியானது.

TVS X

மிகவும் ஸ்போர்ட்டிவான மற்றும் வித்தியாசமான தோற்ற அமைப்பினை பெற்ற டிவிஎஸ் X எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை ரூ.2,49,900 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது

எக்ஸ் மாடலில் 4.4 Kwh பேட்டரி கொண்டு 7 kw பவரை வழங்கும் PMSM மோட்டார் அதிகப்படியான பவர் 11 Kw வெளிப்படுத்தும் நிலையில், அதிகபட்ச வேகம் மணிக்கு 105 கிமீ பெற்று முழுமையான சிங்கிள் சார்ஜில் 140 கிமீ ரேஞ்சு வழங்குவதுடன் இந்த ஸ்கூட்டரில் ஸ்டெல்த், ஸ்டிரைட் மற்றும் சோனிக் என மூன்று விதமான ரைடிங் மோடுகளை பெற்றுள்ளது.

tvs x

Ola S1X

இந்தியாவின் முதன்மையான எலக்ட்ரிக் வாகன தயாரிப்பாளரான ஓலா நிறுவனம் குறைந்த விலையில் S1X, S1X+ என இரு மாடல்களை ரூ.89,999 முதல் ரூ.1,09,999  கிடைக்கின்றது. 3Kwh பேட்டரி பயன்படுத்திக் கொண்டுள்ளது. 3Kwh பேட்டரி பெற்ற வேரியண்ட் அதிகபட்சமாக 90 kmph வேகம் பெற்று சிங்கிள் சார்ஜில் 151 கிமீ பயணிக்கலாம்.

2Kwh பேட்டரி பெற்ற வேரியண்ட் அதிகபட்சமாக 85 kmph வேகம் பெற்று சிங்கிள் சார்ஜில் 91 கிமீ பயணிக்கலாம்.

ola s1x escooter price

Ather 450S

ஏதெர் நிறுவனம் குறைந்த விலை மாடலாக வெளியிட்டுள்ள 450S எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை ரூ.1,29,949 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 2.9Kwh பேட்டரி கொண்ட மாடல் 111 கிமீ ரேஞ்சு வழங்குவதுடன் பவர் மற்றும் டார்க் ஆகியவற்றில் 5.4 Kw பவர் மற்றும் 22 Nm டார்க் உற்பத்தி செய்கின்றது. டாப் ஸ்பீடு  90Km/hr ஆக உள்ளது.

ather 450s escooter

Simple Dot One

ரூ.99,999 விலையில் வெளியிடப்பட்டுள்ள சிம்பிள் டாட் ஒன் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் 3.7Kwh பேட்டரி பேக் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக மணிக்கு 105 கிமீ ஆக உள்ளது. இந்த மாடலை சிங்கிள் சார்ஜில் 152 கிமீ ரேஞ்ச் வழங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக 8.5 kW (11.4 bhp) பவர் மற்றும் 72 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. 0 முதல் 40 கிமீ வேகத்தை 2.77 வினாடிகளில் எட்டும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

simple dotone electric scooter

Simple One

மிக எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான சிம்பிள் ஒன் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை ரூ.1.58 லட்சம் ஆகும். 8.5 kW மின்சார மோட்டார் பொருத்தப்பட்டு அதிகபட்ச பவராக 11 bhp மற்றும் 72 Nm டார்க் வழங்குகின்றது.

5 kWh லித்தியம் ஐயன் பேட்டரி பேக் கொண்ட மாடல் ஒருமுறை சார்ஜ் செய்தால் 212KM/charge ரேஞ்சு வழங்குகின்றது. இந்நிறுவனம் டெலிவரி வழங்குவதில் தொடர்ந்து சிக்கலை எதிர்கொண்டு வருகின்றது.

Simple One Electric Scooter Price

Matter Aera 5000

₹ 1.74 லட்சம் முதல் ₹ 1.84 லட்சம் விலைக்குள் கிடைக்கின்ற மேட்டர் ஏரா 5000 எலக்ட்ரிக் பைக்கில் 5kWh பேட்டரி பொருத்தப்பட்டு லிக்யூடு கூல்டு மோட்டார் அதிகபட்சமாக 10KW பவர் வெளிப்படுத்தும். மிக முக்கிய அம்சமாக 4-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட முதல் எலக்ட்ரிக் பைக் ஆகும்.

0-60 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 6 விநாடிகளுக்கு குறைவான நேரம் மட்டுமே எடுத்துக் கொள்ளும். 3+1 ரைடிங் மோடு கொண்டுள்ளது.  ஏரா 5000 எலக்ட்ரிக் பைக்கின் ரேஞ்சு நிகழ்நேரத்தில் 125 கிமீ வழங்கும்.

matter aera 5000+

Orxa Mantis

ஆர்க்ஸா எனர்ஜிஸ் சில வருடங்களுக்கு முன்பு காட்சிப்படுத்தப்பட்ட மாண்டிஸ் எலக்ட்ரிக் பைக் விலை ரூ.3.60 லட்சம் ஆக உள்ளது.  8.9 kWh லித்தியம் ஐயன் பேட்டரியை பொருத்தி அதிகபட்சமாக 20.5kW (27.5bhp) பவர் மற்றும் டார்க் 93 Nm வெளிப்படுத்தும். டாப் ஸ்பீடு 135km/hr வேகத்தை எட்டுவதுடன், ஒரு முறை சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 221 கிமீ IDC ரேஞ்சு வழங்கும் என உறுதிப்படுதப்பட்டுள்ளது.

இந்த மாடலில் 1.3kW சார்ஜர் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் 5 மணி நேரத்தில் 0 முதல் 80% வரை மாண்டிஸ் சார்ஜ் செய்ய முடியும். டெலிவரி ஏப்ரல் 2024 முதல் துவங்க உள்ளது.

Oxra Mantis

Oben Rorr

ஓபன் ரோர் எலக்ட்ரிக் பைக்கின் விலை ₹ 1,49,999 ஆக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 3 வினாடிகளில் 0 முதல் 40 kmph வேகத்தை எட்டும் மற்றும் அதிகபட்ச வேகம் 100 kmph வழங்கும். 8 kW IPMSM மோட்டார் கொண்டுள்ள எலக்ட்ரிக் பைக்கில் 4.4 kWh பேட்டரி திறன் கொண்டு சிங்கிள் சார்ஜில் 187 கிமீ (IDC) வரம்பை வழங்கும். 120 நிமிடங்கள் (2 மணிநேரம்) விரைவாக வீட்டிலுள்ள சார்ஜ் செய்ய உதவுகிறது.

Oben Rorr electric bike

Kinetic Zulu

ரூ.94,900 விலையில் வெளிவந்துள்ள புதிய கைனெடிக் ஜூலு எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் 2.3 kWh பேட்டரி பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 2.1 kw பவரை வெளிப்படுத்துகின்ற பிஎல்டிசி ஹப் மோட்டார் ஆனது பெற்று டாப் ஸ்பீடு 60 கிமீ வேகத்தை கொண்டுள்ளது. முழுமையான சிங்கிள் சார்ஜ் அதிகபட்சமாக 104 கிமீ ரேஞ்ச் வெளிப்படுத்துகின்றது.

kinetic zulu electric scooter

River Indie

ரிவர் இண்டி ஸ்கூட்டரில் ஐபி 67-மதிப்பிடப்பட்ட 4Kwh பேட்டரி பேக்கை கொண்டு 120 கிமீ ரேஞ்சு வழங்கின்றது. முழுமையான சார்ஜிங் பெற 5 மணி நேரத்தில் பேட்டரியை 80 சதவீதம் சார்ஜ் செய்யலாம். இண்டி ஸ்கூட்டரில் நடுப்பகுதியில் பொருத்தப்பட்ட மோட்டார் 6.7 கிலோவாட் பவர் மற்றும் 26 என்எம் டார்க் வெளிப்படுத்துகிறது. பின்புற சக்கரத்திற்கு பெல்ட் டிரைவ் வழியாக பவர் அனுப்புகிறது.

ரிவர் இண்டி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை ரூ.1.20 லட்சம்

River-Indie-Red-color

Follow us on Google News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.