ஹசரிபாக்:ஜார்க்கண்ட் மாநிலத்தில், கடுங்குளிரிலிருந்து தப்பிக்க அறைக்குள் கரித் துண்டுகளுக்கு தீ மூட்டிய நான்கு மாணவர்கள், அதிலிருந்து வந்த கடும் புகையால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தனர்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் கடந்த 10 நாட்களாக கடுங்குளிர் நிலவுகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
ஜார்க்கண்டின் சிர்ஷி பகுதியில் கணினி பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்து நான்கு பேர் படித்தனர். அனைவரும் அதே பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்தனர்.
கடுங்குளிரால் பாதிக்கப்பட்ட நான்கு பேரும் நேற்று முன் தினம் இரவு, அறைக் கதவை மூடிவிட்டு கரித்துண்டுகளில் தீ மூட்டினர்.
சிறிது நேரத்தில் அறை முழுதும் புகை சூழந்தது. நாான்கு பேரும் மூச்சுத் திணறி மயங்கினர்.
நேற்று காலை நீண்ட நேரமாகியும் அறைக் கதவு திறக்கப்படாததால், அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்து பார்த்தனர். நான்கு பேரும் உயிரிழந்து கிடந்தனர். போலீசுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. உயிரிழந்தவர்கள் பீஹார் மாநிலம் பக்சார் பகுதியைச் சேர்ந்த, ராகுல்,20, அகிலேஷ்,21, பிரின்ஸ்,20, அர்மான் அலி,19 என தெரியவந்தது. நான்குக் உடல்களும் உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்தச் சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement