புதுடில்லி: பாராளுமன்றத்தில் அத்துமீறி நுழைந்த வழக்கில் முக்கிய குற்றவாளி லலித்ஜா கோர்ட் காவலை 2024 ஜன.5 வரை நீட்டித்து சிறப்பு கோர்ட் உத்தரவிட்டது.
கடந்த 13-ம் தேதி பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் பாராமளுன்ற லோக்சபாவிற்குள் இருவர் அத்துமீறி வண்ண புகை குண்டுகளை வீசினர். இதனால் அங்கிருந்த எம்.பி.,க்கள் சபையை விட்டு வேகமாக வெளியேறினர்.
இது தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்டதாக லலித் ஜா என்பர் டில்லி போலீசாரால் கைது செய்யப்பட்டார். டில்லி பாட்டியாலா ஹவுஸ் கோர்ட்டில் வழக்கு நடைபெற்று வருகிறது.இன்று (22-ம் தேதி) ஆஜர்படுத்தப்பட்ட லலித் ஜாவை 2024 ஜன.05 வரை கோர்ட் காவலில் வைக்க நீதிபதி ஹர்தீப் கவுர் உத்தரவிட்டார். இதையடுத்து லலித்ஜா சிறையில் அடைக்கப்பட்டார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement