மாமல்லபுரம் நேற்று மாமல்லபுரத்தில் தொடங்கிய இந்திய நாட்டிய விழா ஒரு மாதம் நடைபெற உள்ளது. ஆண்டுதோறும் மாமல்லபுரத்தில் சுற்றுலாத்துறை சார்பில் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டுப் பயணிகளைக் கவரும் வகையில் ஒரு மாதம் இந்திய நாட்டிய விழா நடைபெறுவது வழக்கம். நேற்று இந்த ஆண்டுக்கான விழா தொடங்கியது. இந்த விழா வரும் ஜனவரி 21 வரை ஒரு மாதம் நடைபெறுகிறது. நேற்று மலை 6 மணிக்கு மாமல்லபுரம் கடற்கரைச் சாலையில் உள்ள நுழைவு வாயில் அருகில் திறந்தவெளி மேடையில் […]
