ஸ்ருதிஹாசனுக்கு டான்ஸ் வைக்கவில்லையே : ராஜமவுலி ஆதங்கம்

கேஜிஎப் இயக்குனர் பிரசாந்த் நீல் டைரக்சனில் பிரபாஸ், பிரித்விராஜ் நடிப்பில் உருவாகியுள்ள சலார் திரைப்படம் இன்று(டிச., 22) வெளியாகி உள்ளது. கதாநாயகியாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். இந்த படம் வெளியாவதை முன்னிட்டு படக்குழுவினர் பல்வேறு புரமோஷன் நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். அதில் பிரபல இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலியுடன் பிரபாஸ், பிரித்விராஜ், படத்தின் இயக்குனர் பிரசாந்த் நீல் ஆகியோர் உரையாடும் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அதில் இயக்குனர் ராஜமவுலி பேசும்போது, படத்தில் ஸ்ருதிஹாசனுக்கு ஐட்டம் நம்பர் எதுவும் இல்லையே என்று தனது வருத்தத்தை இயக்குனர் பிரசாந்த் நீலிடம் வெளிப்படுத்தினார்.

இதுகுறித்து ராஜமவுலி பேசும்போது, “ஸ்ருதிஹாசன் அற்புதமான நடன திறமை கொண்டவர். வித்தியாசமான நடன அசைவுகளை வெளிப்படுத்தக் கூடியவர். குறிப்பாக அவரது ரேஸ் குர்ரம் மற்றும் ஸ்ரீமந்துடு ஆகிய படங்களில் அவரது நடனம் அசத்தலாக இருக்கும். எனக்கு எப்போதெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அப்போதெல்லாம் ஸ்ருதிஹாசனின் நடனத்தை தொலைக்காட்சியிலோ அல்லது மொபைல் போனிலோ பார்ப்பது வழக்கம். பிரசாந்த் நீல் ஸ்ருதிஹாசனின் நடன திறமையையும் பயன்படுத்தி இருக்கலாம்” என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

இதற்கு பதில் அளித்த இயக்குனர் பிரசாந்த் நீல், இந்த படத்தின் கதையில் மட்டுமே தீவிர கவனம் செலுத்தியதாகவும் தேவையில்லாத பாடல்கள் வைத்து ரசிகர்களின் கவனத்தை திசை திருப்ப வேண்டாம் என்று தான் அனைவருக்குமே நடிப்பிற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து காட்சிகளை உருவாக்கியதாகவும் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.