வாஷிங்டன்: கலிபோர்னியா மாகாணத்தில் ஹிந்து கோயில் ஒன்றின் வெளிப்புற சுவர்களில் இந்தியாவுக்கு எதிரான மற்றும் காலிஸ்தான் ஆதரவு வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் நெவார்க் நகரில் உள்ள ஹிந்து கோயில் ஒன்றின் வெளிப்புற சுவர்களில் இந்தியாவுக்கு எதிரான மற்றும் காலிஸ்தான் ஆதரவு வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன. இதையடுத்து கோயில் நிர்வாகம் சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை துவக்கி உள்ளனர்.
இது தொடர்பாக கோயில் நிர்வாகத்தின் செய்தித் தொடர்பாளர் பார்கவ் ராவல் அளித்த பேட்டி: கோயிலுக்கு அருகில் வசிக்கும் பக்தர்களில் ஒருவர், கட்டடத்தின் வெளிப்புறச் சுவரில் கருப்பு மையில் ஹிந்து மற்றும் இந்தியாவுக்கு எதிரான வாசகங்களை பார்த்து கூறினார். இதனையடுத்து உடனடியாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை துவக்கி உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement