பாலக்காடு:”திரைப்படப் பாடல்களில் மனதை ஈர்க்கும் வரிகள் இல்லை,” என, இளம் பாடலாசிரியர் ஹரிநாராயணன் தெரிவித்தார்.
கேரள மாநிலம், பாலக்காட்டில் நடந்த கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற, திரைப்பட பாடலாசிரியர் ஹரிநாராயணன் நிருபர்களிடம் கூறியதாவது:
திரைப்பட பாடல்களை யார் வேண்டுமானாலும் எழுதலாம் என்ற நிலைமை உள்ளது. ஆனால், பாடல்களில் மனதை ஈர்க்கும் வரிகள் இல்லை. இசைக்கு தான் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
பாடல்களில் சிறந்த வரிகளில் இருந்தால் தான், ரசிகர்களை ஈர்க்க முடியும்.
பழைய பாடல்களுக்கு இன்றும் ரசிகர்கள் அதிகம். திரைத்துறையின் பொற்காலம் பழைய பாடல்கள்.
பழைய பாடல்களை போல இசைக்கும் வரிகளுக்கும் முக்கியத்துவம் அளித்து, இன்றைய தலைமுறையினர் கூட விரும்பும் வகையில் பாடல்களை உருவாக்க வேண்டும் என்பது என் கருத்து.
இப்போது, சமூக ஊடகங்கள் வாயிலாக பாடல்கள் வெளிவருகின்றன. அதில், நடிகர், நடிகை, இயக்குனர், இசையமைப்பாளர் ஆகியோரின் பெயர்கள் மட்டும் தான் பிரபலம் செய்யப்படுகின்றன. ஆனால், பாடலாசிரியரின் பெயரை தவிர்த்து விடுகின்றனர். இந்த நிலை மாற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement