Upcoming hero bikes and scooter – 2024 ஆம் ஆண்டு வரவிருக்கும் ஹீரோ பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்கள்

இந்தியாவின் முதன்மையான இரு சக்கர வாகன தயாரிப்பாளரான ஹீரோ மோட்டோகார்ப் வரவிருக்கும் 2024 ஆம் ஆண்டு பிரீமியம் சந்தையில் மிகப்பெரிய அளவில் தன்னுடைய புதிய பைக்குகளை அறிமுகம் செய்து வர்த்தகத்தை விரிவுப்படுத்த திட்டமிட்டுள்ளது.

EICMA 2023 அரங்கில் காட்சிக்கு வைக்கப்பட்ட ஜூம் 160, ஜூம் 125R என இரு ஸ்கூட்டர்களுடன் சில மேம்பட்ட மாடல்களும், மோட்டார் சைக்கிள் பிரிவில் 125சிசி பிரிவில் ஸ்போர்ட்டிவ் பைக், புதிய நேக்டூ ஸ்டைல் 250சிசி பைக், எக்ஸ்பல்ஸ் 210 உடன் 440சிசி பிரிவில் ஹூராகேன் பைக்குகளை விற்பனைக்கு கொண்டு வரலாம்.

Hero Xtreme 125R

125cc சந்தையில் சரிந்து வரும் சந்தை மதிப்பினை அதிகரிக்க ஸ்போர்ட்டிவ் ஸ்டைலை பெற்ற 125சிசி என்ஜின் பெற்ற பைக் அனேகமாக எக்ஸ்ட்ரீம் 125ஆர் என அழைக்கப்படலாம் அல்லது வேறு புதிய பெயரில் வெளியிடப்படலாம்.

வரவுள்ள புதிய மாடல் எஸ்பி 125, ரைடர் 125 மற்றும் பல்சர் 125 ஆகியவற்றுக்கு மிக கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

2024 ஆம் ஆண்டின் மத்தியில் எதிர்பார்க்கப்படுகின்ற ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125R விலை ரூ.90,000 அல்லது அதற்கு குறைவாக துவங்கலாம்.

new hero xtreme 125r testing

Hero XPulse 210

தற்பொழுது சந்தையில் உள்ள குறைந்த விலை அட்வென்ச்சர் ரக எக்ஸ்பல்ஸ் 200 பைக்கில் குறைந்த திறனை கொண்டுள்ளதால், சமீபத்தில் வெளியான கரீஸ்மா XMR 210 பைக்கில் இடம்பெற்றிருக்கின்ற 210cc லிக்யூடு கூல்டு என்ஜின் DOHC (Double Overhead Camshaft) அமைப்பினை பெற்று 9250rpm-ல் 25.5 hp பவர் மற்றும் 7,250rpm-ல் 20.5 Nm டார்க் வெளிப்படுத்தலாம். இதில் 6 வேக கியர்பாக்ஸ் உடன் சிலிப்பர் அசிஸ்ட் கிளட்ச் பொருத்தப்பட்டிருக்கலாம்.

2024 ஆம் ஆண்டின் பண்டிகை காலத்துக்கு முன்பாக விற்பனைக்கு வரக்கூடிய எக்ஸ்பல்ஸ் 210 அட்வென்ச்சர் விலை ரூ.1.70 லட்சத்துக்குள் துவங்கலாம்.

Hero Motocorp xpulse

Hero Xoom 125R

EICMA 2023 கண்காட்சியில் வெளியிடப்பட்ட ஸ்போர்ட்டிவ் ஸ்டைல் பெற்ற ஹீரோ ஜூம் 125R 14-இன்ச் அலாய் வீல் பெற்று 124.6cc என்ஜின் 9.5hp பவர் மற்றும் 10.14Nm டார்க் வழங்குகின்றது. Xoom 125R ஸ்கூட்டரில் முழுமையான எல்இடி ஹெட்லைட், டர்ன் இன்டிகேட்டர், மற்றும் டெயில் லைட்டுகளும் எல்இடி ஆக உள்ளது.

விற்பனைக்கு 2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் எதிர்பார்க்கபடுகின்ற ஜூம் 125ஆர் விலை ரூ.88,000 ஆக துவங்கலாம்.

hero xoom 125r

Hero XOOM 160

ஹீரோ நிறுவனத்தின் முதல் பிரீமியம் மேக்ஸி ஸ்கூட்டர் மாடலான ஜூம் 160 மாடலில் 14 அங்குல அலாய் வீல் பெற்று புதிய லிக்யூடு கூல்டு 156cc, ஒற்றை சிலிண்டர் என்ஜின் அதிகபட்சமாக 8,000rpm-ல் 14hp பவர் மற்றும் 6,500rpm-ல் 13.7Nm டார்க் வழங்குகின்றது.  ஹீரோவின் காப்புரிமை பெறப்பட்ட i3s ஸ்டாப்-ஸ்டார்ட் தொழில்நுட்பம் மற்றும் ஒரு சைலண்ட் ஸ்டார்டர் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

விற்பனைக்கு 2024 முதல் காலண்டில் வரவிருக்கும் ஹீரோ ஜூம் 160 விலை ரூ.1.50 லட்சத்தில் துவங்கலாம்.

hero xoom 160 maxi scooter

Hero Xtunt 250

EICMA 2023 அரங்களில் காட்சிப்படுத்தப்பட்ட புதிய Xtunt 2.5R கான்செப்ட் அடிப்படையில் வரவுள்ள புதிய 250சிசி என்ஜின் பெற்ற மாடல் அனேகமாக 250cc லிக்யூடு கூல்டு என்ஜின் அதிகபட்சமாக 30 hp பவரை வெளிப்படுத்துகின்ற மாடல், சேஸ் உட்பட பல்வேறு பாகங்களை 2.5R ஸ்டன்ட் பகிர்ந்து கொள்ள உள்ளது.

2024 ஆம் ஆண்டின் இறுதி அல்லது 2025 ஆம் ஆண்டு விற்பனைக்கு வெளியாக வாய்ப்புகள் உள்ளது.

hero 2.5r xtunt

Hero XPulse 440

மிகவும் எதிர்பார்ப்புகளுக்குள்ளாகிய மாடல்களில் ஒன்றான அட்வென்ச்சர் ஸ்டைல் எக்ஸ்பல்ஸ் 440 ஆனது 2024 ஆம் ஆண்டின் இறுதியில் வெளியாகலாம். இந்த பைக்கில் உள்ள என்ஜின் ஹார்லி X440 மாடலில் இருந்து பகிர்ந்து கொள்ளலாம்.

hero xpulse 400cc adv e1677492760617

Follow us on Google News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.