Drone Strike On Ship Off Gujarat Was Fired From Iran, Says US | கச்சா எண்ணெய் கப்பல் மீது ட்ரோன் தாக்குதல் பின்னணியில் ஈரான்: அமெரிக்கா தகவல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

வாஷிங்டன்: குஜராத், போர்பந்தர் கடற்கரையில், 20 இந்திய பணியாளர்களுடன் ரசாயன டேங்கரை தாக்கிய ‘ட்ரோன்’ ஈரானில் இருந்து ஏவப்பட்டது என அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்திய பெருங்கடல் பகுதியில், இஸ்ரேல் நிறுவனத்துக்கு சொந்தமான சரக்கு கப்பல் மீது, பயங்கரவாதிகள், ‘ட்ரோன்’ வாயிலாக தாக்குதல் நடத்தினர். இதில், அந்தக் கப்பலில் இருந்த, 21 இந்தியர்கள் உட்பட அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இது தொடர்பாக பென்டகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “காசா விவகாரத்தில் ஈரான் அளித்த ஆதரவு தொடர்ந்தே ஹவுதி இஸ்ரேல் மற்றும் செங்கடலில் வரும் கப்பல்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்துகிறார்கள்.

ஹவுதி செயல்பாட்டில் தங்களுக்குத் தொடர்பில்லை என்று ஈரான் கூறினாலும் கள நிலவரம் இதுவாகவே இருக்கிறது. 20 இந்திய பணியாளர்களுடன் ரசாயன டேங்கரை தாக்கிய ‘ட்ரோன்’ ஈரானில் இருந்து ஏவப்பட்டது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.