தமிழ்நாட்டில் ரூ. 17,111 கோடி மதிப்பிலான 32 தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்கள் குறித்த காலத்தில் அட்டவணைக்குள் முடியாமல் உள்ளது என்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் ஆறு/நான்கு வழிச்சாலை, கிரேடு பிரிப்பான்கள் மற்றும் மேம்பாலம் உள்ளிட்ட விவரங்கள் மற்றும் அதன் கால அட்டவணை குறித்து திமுக மாநிலங்களவை உறுப்பினர் பி. வில்சன் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலளித்துள்ளார். அதில், 985 கி.மீ. […]
