டெல்லி: 2024ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் மற்றும் கட்சிகளுக்கு இடையேயான தொகுதிப்பங்கீடு குறித்து ஆலோசனை நடத்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்களுக்கு அகில இந்திய காங்கிரஸ் தலைமை அழைப்பு விடுத்துள்ளது. மக்களவைத் தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்பாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி உள்ளிட்ட தலைவர்களுக்கு கட்சித் தலைமை அழைப்பு விடுத்துள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் ஒடிசா மாநில பொறுப்பாளரும் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பியுமான அஜோய் […]
