மாஸ்கோ: ரஷ்யா வருமாறு பிரதமர் மோடிக்கு அதிபர் விளாடிமிர் புடின் அழைப்பு விடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
5 நாள் அரசுமுறை பயணமாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ரஷ்யா சென்றுள்ளார். அங்கு ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதை தொடர்ந்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை ஜெய்சங்கர் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது , உக்ரைன் விவகாரத்தில் தீர்வு காண பிரதமர் மோடி ரஷ்யா வர வேண்டும் என ஜெய்சங்கரிடம் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement