புதுடில்லி குளிர்கால விடுமுறையையொட்டி, வழக்குகள் விசாரணை பாதிக்கப்படாமல் இருப்பது தொடர்பாக, உச்ச நீதிமன்றம் இம்மாதம், 5 மற்றும் 22ம் தேதிகளில் இரண்டு சுற்றறிக்கைகளை வெளியிட்டது.
முதலில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில், வழக்குகள் விசாரணை பாதிக்கப்படாமல் இருப்பதற்காக, விசாரணையை ஒத்திவைக்கக் கோரும் கடிதங்கள் தரப்படுவது உடனடியாக நிறுத்தப்படுவதாக கூறப்பட்டிருந்தது.
இதற்கு உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன.
இதைத் தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை உருவாக்க நீதிபதிகள் அடங்கிய குழு அமைக்கப்படும் என, இரண்டாவது சுற்றறிக்கையில் கூறப்பட்டது.இதைத் தொடர்ந்து, இந்தக் குழு தற்போது அமைக்கப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement