ஏறாவூர் நகரசபையின் 2023 இந்த வருடத்திற்கான இறுதி கணக்காய்வு முகாமைத்துவக் குழுவின் கலந்துரையாடல் சபையின் செயலாளர் எம்.எச்.எம் ஹமீம் தலைமையில் (22) நடைபெற்றது.
மட்டக்களப்பு கணக்காய்வுத் திணைக்கள அத்தியட்சகர் என். நிசாந்தன், மாகாண கணக்காய்வு உத்தியோகத்தர், ஏறாவூர் நகரசபை நிதி உதவியாளர் நிஸா லாபிர், உட்பட அலுவலக கிளைத்தலைவர்கள், உத்தியோகத்தர்கள் இதில் கலந்து கொண்டனர்.
கணக்கீட்டு அறிக்கையிடல் தொடர்பாக இந்த ஆண்டு ஏறாவூர் நகரசபை இரண்டு விசேட விருதுகளைப் பெற்றதற்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் தெரிவிக்கப்பட்டதுடன் ஏறாவூர் நகரசபையில் கணக்கீட்டு நடவடிக்கைகள் மிகவும் திருப்திகரமாக அமைந்துள்ளதாக கணக்காய்வுத் திணைக்கள மாவட்ட அத்தியட்சகர் தெரிவித்தார். .
எதிர்வரும் 2024ஆம் ஆண்டில் மேலும் தேவையான மறுசீரமைப்புக்களை மேற்கொண்டு கணக்கீட்டு முகாமைத்துவ நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் இதன்போது அவர் கோரிக்கை வழங்கினார்.