போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் குனா பகுதியில் லாரி மீது பேருந்து மோதி விபத்தில் சிக்கி உள்ளது. இதன் காரணமாக அந்தப் பேருந்து தீப்பிடித்துள்ளது. இதில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
லாரி மீது பேருந்து மோதி கவிழ்ந்துள்ளது. தொடர்ந்து பேருந்தில் தீப்பிடித்துள்ளது. குனா மாவட்ட ஆட்சியர் விபத்தினை உறுதி செய்துள்ளார். காயமடைந்த 17 பேர் குனா மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட நிலையில் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு வருவதாக தகவல். இந்த விபத்து குறித்து உரிய விசாரணை மேற்கொள்ளப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
30 பயணிகளுடன் சென்ற தனியார் பேருந்து குனா – ஆரோன் சாலையில் விபத்தில் சிக்கி உள்ளது. உயிரிழந்தவர்களை அடையாளம் காண டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் வழங்கப்படும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.