பாலக்காடு:கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்தில் கல் உடைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த குடும்பத்தினர் தங்கி உள்ளனர்.
நேற்று முன்தினம் அதிகாலை, பெற்றோருடன் துாங்கிக் கொண்டிருந்த, 3 வயது சிறுமியை துாக்கிச்சென்ற ஒருவர், பாலியல் பலாத்காரம் செய்தார்.
சிறுமியின் சத்தம் கேட்டு பெற்றோர் ஓடி வருவதை கண்டு, தப்பிக்க முயன்ற அவரை பிடித்து எல்லை பகுதியில் இருந்த பொள்ளாச்சி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
விசாரணையில், சிறுமியை பலாத்காரம் செய்தது, பாலக்காடு மாவட்டம், எருத்தேம்பதியை சேர்ந்த கந்தசாமி, 77, என்பது தெரிந்தது. கேரள மாநிலம், கொழிஞ்சாம்பாறை போலீசார் அவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement