பிரேசிலியா:பிரேசிலில், உறவினரின் 15 வயது மகளுடன் தனிமையில் இருந்த கணவரின் பிறப்புறுப்பை மனைவி வெட்டிய சம்பவம் அரங்கேறி உள்ளது.
தென் அமெரிக்க நாடான பிரேசிலின், சாவோ பாலோ மாகாணத்தில் உள்ள அதிபயா என்ற பகுதியைச் சேர்ந்த, 39 வயது நபர், உறவினர் ஒருவரின் 15 வயது மகளுடன் தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளார்.
இதனால், ஆத்திரமடைந்த அவரது மனைவி, அவரை கட்டிலில் இருந்து தரதரவென இழுத்துச் சென்று கை மற்றும் கால்களை கட்டினார். பின், ‘ஷேவிங்’ செய்ய பயன்படுத்தும், ‘ரேசரை’ எடுத்து, அவரது பிறப்புறுப்பை வெட்டி எடுத்தார்.
இதையடுத்து, அந்த உறுப்பை தண்ணீரில் கழுவிய அவர், மொபைல் போனில் புகைப்படம் எடுத்தார். இந்தச் சம்பவம் கடந்த வாரம் நடந்துள்ளது.
இது குறித்து, தகவலறிந்து போலீசார் வந்த போது, எந்தப் பதற்றமுமின்றி அந்தப் பெண், ‘கூலாக’ இருந்துள்ளார். அவர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பாதிக்கப்பட்ட நபர், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement