புதுடில்லி, டிச. 29-
மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் தலைமை இயக்குனர் ஜெனரலாக, இந்தோ – திபெத் எல்லை பாதுகாப்பு படை தலைவராக இருந்த அனீஷ் தயாள் சிங் நியமிக்கப்பட்டு உள்ளார்.
‘இண்டலிஜன்ஸ் பீரோ’ என்ற உளவு துறையின் சிறப்பு இயக்குனராக உள்ள ராகுல் ரஸ்கோத்ரா, இந்தோ – திபெத் எல்லை பாதுகாப்பு படை தலைவராகி உள்ளார். மத்திய தொழிலக பாதுகாப்பு படையின் தலைமை இயக்குனராக நீனா சிங் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்தப் படைப்பிரிவுக்கு நியமிக்கப்படும் முதல் பெண் இயக்குனர் இவர் தான்.
தீயணைப்பு, சிவில் பாதுகாப்பு மற்றும் ஊர்க்காவல் படை போன்றவற்றின் தலைமை இயக்குனராக விவேக் ஸ்ரீவஸ்தவா நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement