குணா: மத்திய பிரதேசத்தில் லாரியும் தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பேருந்து தீப்பிடித்ததில் 13 பேர் உடல் கருகி பலியான சம்பவம் நடந்துள்ளது.
மத்திய பிரதேசத்தின் குணா மாவட்டத்தில் 30 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து, குணா-ஆரோன் என்ற இடத்தில் எதிரே வந்த லாரியுடன் மோதி விபத்திற்குள்ளானது. இதில் பேருந்து தீப்பிடித்து எரிந்தது. அதில் பயணித்த 13 பேர் உடல் கருகி பலியாயினர். 17 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அவர்கள் மருத்துவமனையி்ல் அனுமதிக்கப்பட்டனர்.
அவர்களை குணா மாவட்ட மாவட்ட கலெக்டர் தருண், சந்தித்து ஆறுதல் கூறினார். விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 4 லட்சமும் , காயமடைந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரம் இழப்பீடு வழங்கப்படும் என முதல்வர் மோகன் யாதவ் அறிவித்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement