Xiaomi SU7 – 800Km ரேஞ்ச்.., சியோமி SU7 எலக்ட்ரிக் கார் அறிமுகமானது

ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான சீனாவின் சியோமி நிறுவனம் தனது சொந்த நாட்டில் SU7 எலக்ட்ரிக் காரை 73.6 kWh மற்றும் 101 kWh என இரண்டு விதமான பேட்டரி ஆப்ஷனை பெற்றதாக அறிமுகம் செய்துள்ள நிலையில் விற்பனைக்கு 2024 ஆம் ஆண்டின் துவக்க மாதங்களில் சீனாவில் வெளிவரவுள்ளது.

73.6 kWh பேட்டரி பெற்ற SU7 வேரியண்ட் 668Km ரேஞ்ச் மற்றும் டாப் SU7 Max வேரியண்டில் 73.6 kWh பேட்டரி பொருத்தப்பட்டு 800 கிமீ ரேஞ்ச் வழங்கும் என குறிப்பிட்டுள்ளது.

Xiaomi SU7

சியோமி நிறுவனத்தின் முதல் எலக்ட்ரிக் கார் மாடலாக வந்துள்ள SU7 என்ற பெயருக்கு ஸ்போர்ட் அல்டிமேட் 7 (Sports Ultimate 7) என்ற விளக்குத்துடன் துவங்கின்றது. இந்த மாடலுக்கான பேட்டரி அமைப்பின் CATL (Contemporary Amperex Technology Limited) என்ற நிறுவனத்த்திடமிருந்து பெற்று மிக குறைந்த காற்று உராய்வினை பெறும் வகையில் ஏரோ டைனமிக்ஸ் அம்சத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு குறைவான 0.195 Cd ஆக உறுதிப்படுத்தியுள்ளது.

668Km ரேஞ்ச் தரவல்ல துவக்க நிலை 73.6 kWh பேட்டரி பெற்ற ஒற்றை மோட்டாருடன் ரியர் வீல் டிரைவ் கொண்டுள்ள மாடல் 295 bhp மற்றும் 400 Nm டார்க் வழங்குவதுடன், SU7 ஆனது 0-100 கிமீ வேகத்தை 5.28 வினாடிகளில் எட்டிவிடும், மேலும் அதிகபட்ச வேகம் மணிக்கு 210 கிமீ வரை எட்டும், 100-0 kmph பிரேக்கிங் தூரம் 35.5 மீட்டருக்குள் வாகனத்தை நிறுத்த இயலும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

xiaomi su7 car specs

800Km ரேஞ்ச் தரவல்ல SU7 மேக்ஸ் 101 kWh பேட்டரி பெற்ற இரட்டை மோட்டாருடன் ஆல் வீல் டிரைவ் கொண்டுள்ள மாடல் 664 bhp மற்றும் 838 Nm டார்க் வழங்குவதுடன், SU7 ஆனது 0-100 கிமீ வேகத்தை 2.78 வினாடிகளில் எட்டிவிடும், மேலும் அதிகபட்ச வேகம் மணிக்கு 265 கிமீ வரை எட்டும், 100-0 kmph பிரேக்கிங் தூரம் 35.3 மீட்டருக்குள் வாகனத்தை நிறுத்த இயலும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

டாப் வேரியண்ட் SU7 மேக்ஸ் காரினை ஐந்து நிமிட சார்ஜ் மூலம் 220 கிமீ தூரத்தையும், அல்ட்ரா-ஃபாஸ்ட் சார்ஜரில் இணைக்கப்பட்டால் 15 நிமிட சார்ஜ் மூலம் 510 கிமீ தூரம் பயணிக்கும் அளவிலான சார்ஜ் பெறும் என சியோமி குறிப்பிடுகின்றது.

ஸ்போர்ட்டிவான தோற்ற அமைப்பினை பெற்றுள்ள சியோமி SU7 காரின் இன்டிரியரில் 16.1-இன்ச் 3K தொடுதிரை சிஸ்டம் டேஷ்போர்டில் இடம்பிடித்துள்ளது, மேலும் கேபினுக்குள் அதிக இயற்கை ஒளியை அனுமதிக்கும் பரந்த கண்ணாடி கூரை. பூட் ஸ்பேஸ் 517 லிட்டர், முன் டிரங்க் 105 லிட்டர் கொள்ளளவு வழங்குகிறது. ஏழு ஏர்பேக்குகள் மற்றும் மேம்பட்ட டிரைவர் உதவி அமைப்புகளுடன் (ADAS) வந்துள்ளது.

xiaomi su7 side xiaomi su7 dashboard xiaomi su7 electric

Follow us on Google News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.