சென்னை: பயணிகள் நெருக்கடியை குறைக்கும் வகையில், குஜராத் மாநிலம்அகமதாபாத்தில் இருந்து சென்னை வழியாக திருச்சிராப்பள்ளிக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து டிச.28, ஜன.4, 11, 18, 25 ஆகிய தேதிகளில் காலை 9.30 மணிக்கு சிறப்பு கட்டண ரயில் (09419) புறப்பட்டு, சென்னை எழும்பூர் வழியாக திருச்சிராப்பள்ளியை அடையும். மறுமார்க்கமாக, திருச்சிராப்பள்ளியில் இருந்து டிச.31, ஜன.7, 14, 21, 28 ஆகிய தேதிகளில் அதிகாலை 5.40 மணிக்கு சிறப்பு கட்டண ரயில் (09420) புறப்பட்டு, சென்னை எழும்பூர் வழியாக அகமதாபாத்தை அடையும்.