கடுமையான பனிமூட்டத்தால் டெல்லி விமான நிலையத்தில் 100 விமானங்கள் தாமதம்: மக்கள் அவதி

புதுடெல்லி: தேசிய தலைநகர் டெல்லியில், அடர்த்தியான மூடுபனிமூட்டம் காரணமாக 100-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாகியிருக்கின்றன. மேலும் சில விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் மக்கள் கடும்குளிரில் சிக்கித்தவித்து வருகின்றனர்.

டெல்லி, பஞ்சாப், ஹரியானா, சண்டிகர் ஆகிய மாநிலங்களில் அடர்த்தியான பனிமூட்டம் காரணமாக ரெட் அலர்ட் (Red Alert) விடுக்கப்பட்டுள்ளது. தேசிய தலைநகர் டெல்லியில், அடர்த்தியான பனிமூட்டம் காரணமாக 100-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாகியிருக்கின்றன. மேலும் சில விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் மக்கள் கடும்குளிரில் சிக்கித்தவித்து வருகின்றனர். டெல்லியில் இன்று காற்றின் தரத்தில் ஓரளவு முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. அதாவது சராசரி காற்றுத் தரக் குறியீடு (AQI) 356 இல் நிலைபெற்றுள்ளது. சிறிதளவு தளர்வு இருந்தாலும், அடுத்த இரண்டு நாட்களுக்கு காற்றின் தரம் ‘மிகவும் மோசமான’ பிரிவில் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜனவரி 2 ஆம் தேதி வரை வட இந்திய மிகவும் அடர்த்தியான மூடுபனி தொடரும் என்று கணித்துள்ளது.

பனிமூட்டத்தால், பார்வைத்திறன் குறைவாக இருப்பதால் அதிகாலை 4 மணி முதல் 10 மணி வரை பயணம் செய்வதை தவிர்க்குமாறு நிபுணர்கள் வேண்டுகோள் விடுத்தனர். இது விபத்துக்களை தடுக்க உதவும் எனக் கூறப்படுகிறது. அடுத்த மூன்று நாட்களுக்கு, உத்தரபிரதேசத்தில் அடர்த்தியான மூடுபனி காணப்பட வாய்ப்புள்ளது. இதன் காரணமாக, பேருந்துகளை இயக்குவதற்கான வழிகாட்டுதல்களை அம்மாநிலத்தின் சாலைப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ளது. டெல்லியில் நேற்று அடர்த்தியான பனி மூட்டம் காரணமாக இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் 134 விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. டெல்லியில் மூடுபனியால் காணும் திறன் மிகவும் குறைவாக இருந்ததால் ரயில்களின் சேவைகளும் பாதிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.