அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா அன்று பொதுமக்கள் யாரும் அயோத்திக்கு வர வேண்டாம் எனப் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்து மத வழிபாட்டு தலமான ராமர் கோவில் உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ளது. இந்த ராமர் கோவில் வரும் 22ம் தேதி திறக்கப்பட உள்ளது. ராமர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வசதிக்காக, அயோத்தியில் புதிய விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது, மேலும் அயோத்தி ரயில் நிலையம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இன்று பிரதமர் மோடி […]
